பெரியவராக நடிக்க மட்டுமல்ல பெரியாரின் கொள்ளுப் பேரன் வேடத்திலும் தன்னை பொருத்திக்கொள்ளவும் முடியும் என்பதை நிருபிக்கவுள்ளார். புரட்ச்சித் தமிழன்.
சத்யராஜின் லொள்ளுக்கு என்றுமே 16 வயசுதான் என்பது தெரிந்த விஷயம். ஆனால் ஒரு படத்திற்காக 25 வயது இளைஞனாக மாறுகிறார் என்பது ஆச்சரியமான தகவல் தான். “சங்கமித்ரா” என்னும் படத்திற்காகதான் இந்த மாற்றம். 25 வயது இளைஞன் வேடத்தில் நடிப்பது குறித்து சத்யராஜ் கூறியதாவது :- “சங்கமித்ரா” ஒரு காதலை அடிப்படையாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.16 வயது வாலிபனாக இருக்கும் ஒருவன் ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்து விடுகிறான். இதனால் அப்பெண்ணின் குடும்பம் சீரழிந்து விடுகிறது.
கால சுழற்சியில் பக்குவமான பருவத்திற்கு அவன் மாறும்போது, தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே நரகமாகிவிட்டதே என அவன் உணர்கிறான். இதனால் கல்யாணம் செய்து கொள்ளாமலே கடைவரை அப்பெண்ணுக்காக வாழ முடிவெடுப்பது தான் கதை.
இதற்காக 25 வயது இளைஞனில் ஆரம்பித்து 65 வயது வரை முதியவர் வரை 4 பருவங்களில் நடிக்கிறேன். இளைஞன் வேடமேற்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.. வயதான வேடத்தில் நடிப்பது கூட தலையில் டை அடித்து அந்த தோற்றத்தை கொண்டுவந்து விடலாம். ஆனால் இளைஞனாக நடிப்பது சவாலான விஷயம்.
1978-களில் நடக்கும் கதையென்பதால் அப்போதுள்ள இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்,அவர்கள் ஸ்டைல் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் உடல் ரீதியான சில மாற்றங்களுக்கு உடற்பயிற்சி செய்து வருகிறேன்” என்றார்.
முன்செல்ல